குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை கொடுங்க!

credit: freepik
சமையலறையில் இருக்கும் மசாலா பொருள்கள் எல்லாமே சமையலுக்கு சுவை கூட்ட மட்டுமே பயன்படுத்துவதில்லை. இவை உடலுக்கு எதிர்ப்புசக்தி தரக் கூடியது.
credit: freepik
இதில் முதன்மையானது மஞ்சள், பூண்டு, இஞ்சி, பட்டை, அன்னாசிப்பூ, இலவங்கம், கொத்தமல்லி, சீரகம், மிளகு போன்றவை எல்லாமே குழந்தைகளின் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியவை.
credit: freepik
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பழம் கொடுக்கும் போது கொய்யா, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, சிவப்பு நிற பழங்கள் போன்றவற்றை கொடுக்கலாம்.
credit: freepik
காய்கறிகளில் சிவப்பு குடைமிளகாய். தக்காளி, ப்ரக்கோலி அடர்ந்த நிற காய்கறிகள் சேர்க்கலாம். இவை எல்லாமே வைட்டமின் சி நிறைந்த ஆதாரத்தோடு ஆன் டி ஆக்ஸிடண்ட் நிறைந்தவை.
credit: freepik
பாதாமை ஊறவைத்து தோலுரித்து கொடுங்கள். அக்ரூட் முந்திரி, பிஸ்தா போன்றவற்றை கொடுக்கலாம்.இது ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யும்.
credit: freepik
முட்டை, கோழி இறைச்சி என இரண்டுமே புரதத்தின் நிறைந்த மூலமாக இருக்கும். வைட்டமின் டி இயற்கையாக இருக்கும் உணவு பொருளில் இதுவும் ஒன்று. உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு இது உதவுகிறது.
credit: freepik
மேலும் முட்டையில் இரும்புச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் பி உள்ளது. குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கலாம். முட்டையை ஆம்லெட் போட்டும் கொடுக்கலாம்
credit: freepik
குழந்தைகளுக்கு டீ, காபி பழகாமல் பால் குடிக்க பழகுங்கள். தினமும் ஒரு டம்ளர் பாலை கொடுக்க தவறாதீர்கள்.
credit: freepik
Explore