குழந்தை பிறந்து 7 மாதம் வரை கொடுக்க வேண்டிய உணவுகள்.!!

குழந்தை பிறந்து 7 மாதம் வரை கொடுக்க வேண்டிய உணவுகள்.!!

Published on
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. குழந்தைகள் வளர வளர தாய்ப்பால் மட்டுமே அவர்களது பசியைப் போக்காது. குழந்தைகள் வளர்ச்சிக்கு திட உணவுகளை கொடுக்க வேண்டும்.
குழந்தை பிறந்த முதல் மாதம் தாய்ப்பால் தான் முதல் உணவாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை எந்த ஒரு திட உணவுகளையும் கொடுக்கக்கூடாது. முதல் மாதத்தில் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.
குழந்தை பிறந்த 2-வது மாதத்தில் ஒரு நாளைக்கு 7-8 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
3-வது மாதத்தில் தாய்ப்பால் மட்டும் போதுமானது. இந்த மாதத்தில் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
4 மாதம் ஆகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி இணை உணவுகள் கொடுக்கலாம். பழச்சாறு கொடுக்கலாம். அதிலும் ஆரஞ்சு ஜூஸை குழந்தைக்கு கொடுப்பது நல்லது. பழச்சாறு வீட்டில் தயாரித்ததாக இருக்க வேண்டியது அவசியம்.
5-வது மாதத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு திட உணவுகளைக் கொடுக்க வேண்டும். வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை மசித்து கொடுக்கலாம்.
6-வது மாதத்தில் குழந்தை சில உணவுகளை உட்கொள்ள மறுத்தால், அந்த உணவுகளை மீண்டும் கொடுக்க வேண்டாம். இந்த மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலுடன், திட உணவுகளை கொடுக்கலாம்.
குழந்தை பிறந்து 7 மாதம் ஆகிவிட்டால், நன்கு மசித்த சாதம், தயிர், மசித்த ஆப்பிள் அல்லது வாழைப்பழம், வேக வைத்து மசித்த காய்கறிகள் போன்றவற்றையும் கொடுக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com