பாகற்காயில் தயிர் ஊற்றி..குக்கிங் டிப்ஸ்!

பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.
மிளகாய்த்தூள் கெட்டுப்போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காய கட்டியை போட்டு வைத்தால் போதும். நீண்ட நாள் காரம் மணம் மாறாமல் இருக்கும்.
கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க முறுமுறுப்பாக இருக்கும். எண்ணெய் தேவை குறைவாகும்.
உள்ளங்கையில் சமையல் எண்ணெய் சில சொட்டு ஊற்றி தேய்த்து மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் வாடை பிடிக்காது.
முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.
மிளகு ரசத்திற்கு குழைய வைத்து வேக வைத்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
Explore