ரத்த அழுத்தத்தை சீராக்க சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
c
ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், கீரை, இளநீர் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Photo: freepik
கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, கொய்யா, தர்பூசணி, மாதுளை, பீன்ஸ், பட்டாணி, பயறு வகை, புதினா, கொத்தமல்லி ஆகிய நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடலாம்.
Photo: freepik
ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு பூண்டு மிகவும் ஏற்றது. பூண்டில் உள்ள சத்துகள் ரத்தக்குழாயை விரிவடையச் செய்கின்றன.
Photo: freepik
சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பானங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்வதோடு ரத்த அழுத்தத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
Photo: freepik
உருளைக்கிழங்கை பொரித்து தயார் செய்யப்படும் 'பிரெஞ்ச் பிரை' மசாலா பொருளையும் தவிர்க்க வேண்டும். அதில் கலந்திருக்கும் உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதற்கு பதில் நீராவியில் சமைத்த காய்கறிகளை கொண்டு சாலட் தயார் செய்து ருசிக்கலாம்.
Photo: freepik
தலைவலி, மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, காலில் வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவையும் உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள்தான்.