கொழுப்பை குறைக்க உதவும் லீன் புரோட்டீன் உணவுகள்!

credit: freepik
புரத உணவுகள் எல்லாவற்றிலும் குறிப்பிட்ட அளவில் கொழுப்பும் இருக்கும். ஆனால் கொழுப்பே இல்லாத புரத உணவுகள் தான் லீன் புரோட்டின் (மெலிந்த உணவுகள்) என்று அழைக்கப்படுகின்றன
credit: freepik
பருப்பு மற்றும் பயறு வகைகளில் அதிக அளவில் புரதங்கள் இருக்கின்றன. 100 கிராம் பயறுகளில் கிட்டதட்ட 24 கிராம் அளவுக்கு புரதச்சத்துக்கள் கிடைக்கும். அதேசமயம் அவற்றில் கொழுப்பு 0 சதவீதம்.
credit: freepik
அதனால் கொழுப்பு அதிகமுள்ள புரதங்களான இறைச்சியை எடுத்துக்கொள்வதை விட பயறு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
credit: freepik
காய்கறி சாலட் போன்றவற்றில் வேகவைத்த அல்லது முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். அது சுவையையும் அதிகரிக்கும். வைட்டமின் தேவையையும் நிறைவு செய்யும்.
credit: freepik
சோயா பீன்ஸ், கிட்னி பீன்ஸ், ராஜ்மா போன்ற பீன்ஸ் வகைகளில் அதிக அளவு மெலிந்த புரதங்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் கொழுப்பு கிடையாது. ஜீரண ஆற்றலை மேம்படுத்த காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்த பீன்சை சேர்த்து சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம்.
credit: freepik
கொண்டைக்கடலை நிறைய ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமாக அதிக அளவு புரதங்களைக் கொண்டிருக்கிறது
credit: freepik
புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்கு கிடைக்க வால்நட் மிகச்சிறப்பாக உதவி செய்யும். இதனால் ஆரோக்கியமான முறையில் எடையையும் குறைக்கலாம்.
credit: freepik
அவகேடோவில் நிறைய கொழுப்பு அமிலங்களும் நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. தினசரி உணவில் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்யும்.
credit: freepik
Explore