குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

credit: freepik
குளிர் காலநிலை சருமத்தின் ஈரப்பதத்தை நீக்கி, வறட்சி மற்றும் மந்தநிலைக்கு வழி வகுக்கும். இந்த சமயத்தில் இயற்கையாகவே சருமத்திற்கு ஈரப்பதமூட்டும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமானது.
credit: freepik
அவகோடா: ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த அவகோடா சருமத்தின் வெளிப்புற அடுக்கில் ஈரப்பதத்தை தக்கவைக்க துணை புரியும். சருமம் நீரிழப்புக்கு ஆளாகுவதை தடுத்து, மென்மையாக வும், மிருதுவாகவும், பொலிவாகவும் மாற வழிவகை செய்யும்.
credit: freepik
ஆளி விதைகள்: இந்த விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சருமத்தை வலுப்படுத்தக்கூடியது. சருமத்தின் வெளிப்புற அடுக்கில் தோல் உரிதல் ஏற்படுவதை தடுக்கும். குளிர் காலநிலையிலும் கூட சருமம் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவி புரியும்.
credit: freepik
ஆரஞ்சு: வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியது. குளிர் காலத்தில் உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும், உறுதியாகவும், பொலிவுடனும் வைத்திருக்க துணை புரியும்.
credit: freepik
மாதுளை: மாதுளை பழத்தில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் பாலி பினால்கள் அதிகமாக உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்டவை. குளிர்காலத்தில் இயற்கையாகவே சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கக்கூடியவை.
credit: freepik
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: பீட்டா கரோட்டின் நிறைந்திருக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சரும செல்களை புதுப்பிக்க உதவிடும். சரும வறட்சியை தடுக்கவும் செய்யும்.
credit: freepik
வால்நட்: வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை மிருதுவாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வழிவகை செய்யும்.
credit: freepik
சால்மன் மீன்: ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த சால்மன் மீன், சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
credit: freepik
Explore