ஆரஞ்சு - நெல்லிக்காய்: உடல் எடை குறைக்க எது சிறந்தது தெரியுமா?
ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் இரண்டும் வைட்டமின் சி, நார்ச்சத்து, வளர்சிதை மாற்றம், ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்ப பெற்றவை. இவை உடல் எடை குறைப்பிற்கு வழிவகுப்பவை. எனினும் ஆரஞ்சு, நெல்லிக்காய் இவற்றில் எது சிறந்தது என்று பார்ப்போம்.
credit: freepik
எது சிறந்தது?: நெல்லிக்காய், வளர்சிதை மாற்ற ஊக்கியாக செயல்படும். கொழுப்பை வேகமாக எரிக்க உதவிடும். செரிமானத்தையும் மேம்படுத்தும். வீக்கத்தை குறைக்கும்.
credit: pixabay
தொடர்ந்து நெல்லிக்காயை உட்கொண்டால் அதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் காரணமாக வளர்சிதை மாற்றத்திற்கு நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு பருகுவது கலோரி எரிப்பை துரிதப்படுத்தும்.
credit: pixabay
நெல்லிக்காயுடன் ஒப்பிடும்போது ஆரஞ்சு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து. பசியை கட்டுப்படுத்தி, நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை குறைக்க உதவிடும். உடலில் நீரேற்றத்தை தக்கவைக்க துணைபுரியும்.
credit: freepik
உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு ஆரஞ்சு பழம் சாப்பிடலாம். ஆரஞ்சு பசியை கட்டுப்படுத்த உதவுகிறது என்றாலும், நெல்லிக்காய் கொழுப்பை எரிக்க வழிவகுக்கும்.
credit: freepik
இரண்டு பழத்திற்கும் தனித்துவமான நன்மைகள் உள்ளன. உடல் எடையை குறைப்பதற்கு இவை இரண்டுமே அவசியமானவை. இரண்டையும் தினமும் மிதமாக (நெல்லிக்காய் -2, ஆரஞ்சு 1) உட்கொள்வது நல்லது.
credit: freepik
எதில் ஊட்டச்சத்து அதிகம்?: 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் சுமார் 87 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. வைட்டமின் சி 53 மில்லி கிராமும், செரிமானத்தை ஊக்குவிக்கும் நார்ச்சத்து 2.4 கிராமும் உள்ளடங்கி இருக்கும். 47 கலோரிகளும் காணப்படும்.
credit: freepik
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மி.கி வரை காணப்படும். அதாவது ஒரு ஆரஞ்சு பழத்தை விட 10 மடங்கு அதிக வைட்டமின் சி நெல்லிக்காயில் இருக்கிறது. கலோரிகளும் (44) குறைவு.