குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை..உடலுக்கு வலுவூட்டும் ராகி மால்ட்.!!

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு மால்ட். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு - 5 டேபிள் ஸ்பூன், பால் - 2 கப், தண்ணீர் - அரை கப், நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன், பாதாம் பொடி/நறுக்கிய பாதாம் - 3 டேபிள் ஸ்பூன் ஆகியவை.
செய்முறை : கேழ்வரகு மாவை வாணலியில் போட்டு 5 நிமிடம் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் 1/2 கப் பாலில் ராகி மாவை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மீதமுள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பாலானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கலந்து வைத்துள்ள கேழ்வரகு கலவையை சேர்த்து கட்டிகள் சேராதவாறு கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
இறுதியில் அதில் ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து கிளறி இறக்கி, பாதாம் பொடியை சேர்த்து பரிமாறவும். சுவையான சத்தான ராகி மால்ட் ரெடி!!!
Explore