புதிய கீதை முதல் ஜனநாயகன் வரை..விஜய் படங்கள் சந்தித்த சர்ச்சைகள்!
புதிய கீதை - படத்திற்கு முதலில் 'கீதை' என்று தலைப்பு வைக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த விஜய் நடிக்கும் படத்திற்கு ‘கீதை’ என்று பெயர் வைக்கக் கூடாது என இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு ‘புதிய கீதை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
காவலன் - காவலனுக்கு முன்பு விஜய் நடித்த படங்கள் ஓடாதாதல் நஷ்ட ஈடு தரவேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
துப்பாக்கி - படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக காட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்து, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் படத்தின் குறிப்பிட்ட சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டன.
தலைவா - அதிக சர்ச்சையை ஏற்படுத்திய படம் என்றால் அது 2013ஆம் ஆண்டு வெளியான தலைவா திரைப்படம்தான். படத்தின் துணை தலைப்பான Time To lead என்கிற வாசகம் சர்ச்சையாகி படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
கத்தி - கடந்த 2014-ம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படத்தை அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரித்திருந்தாகக் கூறி எதிர்ப்பு கிளப்பியது.
புலி - படத்தின் வெளியீட்டின்போது நிதி தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
மெர்சல் - கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா ஆகிய வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
சர்கார் - படத்தில் அரசு வழங்கிய இலவசப் பொருட்களை தீயில் எரிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்ததோடு, அரசை விமர்சிக்கும் வகையிலான காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
ஜனநாயகன் - விஜய்யின் கடைசி படமான இந்த படத்தில், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைக்காத நிலையில், படம் திரைக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.