காலை டிபன்.. சுவையான சிவப்பு அரிசி வேர்க்கடலை கார பணியாரம்!

காலை டிபன்.. சுவையான சிவப்பு அரிசி வேர்க்கடலை கார பணியாரம்!

Published on
காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் சிவப்பு அரிசி வேர்க்கடலை கார பணியாரம் செய்து சுவைக்கலாம். அதை மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் : சிவப்பு அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப், வேர்க்கடலை - அரை கப், வெங்காயம் - 1, கேரட், கோஸ் - 1, பச்சை மிளகாய் - 2, உப்பு, பெருங்காயத்தூள், நெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி வகைகள், வேர்க்கடலை இரண்டையும் தனித் தனியாக ஊற வைத்து ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பின் கேரட், கோஸ், பச்சை மிளகாய் ஆகிய காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்கறிகளை போட்டு சற்று வதக்க வேண்டும்.
பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பணியார கல்லை அடுப்பில் வைத்து குழியில் நெய் ஊற்றி, அதில் கலந்த மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
சத்தான சுவையான சிவப்பு அரிசி வேர்க்கடலை கார குழிப்பணியாரம் ரெடி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com