காந்தியடிகளின் 157 -வது பிறந்த நாள்..!

மகாத்மா காந்தி இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்ற ஊரில் 1869 -ம் ஆண்டு பிறந்தார்.
காந்தி 1983-ம் ஆண்டு கஸ்தூரி பாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பள்ளிப்படிப்பை முடித்தவுடன் காந்தி இங்கிலாந்து நாட்டிற்கு சட்டப்படிப்பு படிக்க சென்றார். அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார்.
காந்தியடிகள் இருவகையான புரட்சிகளை செய்தார். வெள்ளைக்காரனை எதிர்த்து அரசியல் புரட்சி, அதே வேளையில் இந்திய மக்களிடத்திலும் சமூக சீர்திருத்த புரட்சிகளையும் செய்தார் காந்தி.
அகிம்சை, எளிமை, ஏழைகளின் மீது அன்பு, தன்னல மறுப்பு, எதிரியையும் மன்னிக்கும் பரந்த உள்ளம் ஆகியவை காந்தியடிகளின் உயர்ந்த பண்புகளாக இருந்தன.
நம் இந்தியத் திருநாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர்களை வெளியேற்றுவதற்காக காந்தியடிகள் ஆயுதமின்றி அகிம்சை வழியில் தொடர்ந்து போராடினார்.
"வெள்ளையனே வெளியேறு" என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்றிணைத்து அறவழியில் புரட்சி செய்து நம் இந்திய நாட்டிற்கு 1947 -ம் ஆண்டு சுதந்திரம் பெற்று தந்தார்.
1948-ம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். 2007 -ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்து கௌரவித்தது.
Explore