நெல்லிக்காய்-கற்றாழை; முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது தெரியுமா?

credit: pixabay
நெல்லிக்காய்: இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு மட்டுமின்றி உச்சந்தலை மற்றும் முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் பொருட்களும் நிரம்பியுள்ளன.
credit: pixabay
அடிப்படையில் நெல்லிக்காய் முடியின் வேர்க்கால்களுக்கு புரதம்போல் ஊட்டச்சத்து மதிப்புடன் செயல்பட்டு அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது.
credit: pixabay
பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். விரைவில் முடி நரைப்பதை குறைக்கும். தலைமுடி மீண்டும் உயிர்ப்புடன் காட்சியளிக்க உதவும்.
credit: pixabay
கற்றாழை: இது மென்மையானது, குளிர்ச்சியானது. உச்சந்தலைக்கு பயன்படுத்த ஏதுவானது. கற்றாழையில் வைட்டமின்களும், நொதிகளும் நிறைந்துள்ளன.
credit: pixabay
உச்சந்தலை வறட்சியாக காட்சி அளிக்கிறதா? அரிப்பு ஏற்படுகிறதா? கற்றாழை இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இது ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது.
credit: pixabay
தலைமுடி சரியாக வளர்வதற்கு ஏற்ற சூழலையும் இது அளிக்கிறது. கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்து, அதன் உள்பகுதி சதையை வெளியே எடுத்து நேரடியாக தலையில் தேய்க்கலாம்.
credit: pixabay
எது சிறந்தது: நெல்லிக்காயை பொறுத்தவரை முடி உதிர்வை தடுக்கவும், முடியை வலுவாக்கவும், முடி அடர்த்திக்கும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. கற்றாழை உச்சந்தலையை தூய்மையாக பராமரிக்கவும், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவிடக்கூடியது.
credit: pixabay
முடி உதிர்வு பிரச்சினை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தரவாக அமையும். உச்சந்தலை வறண்டு அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை கைகொடுக்கும்.
credit: pixabay
Explore