பச்சை மிளகாய் - சிவப்பு மிளகாய்; எது ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா?

credit: freepik
பச்சை மிளகாய் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான செயல்முறை எளிதாக நடைபெற உதவும். மேலும் குடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
credit: freepik
இதில் இருக்கும் வைட்டமின் ஏ, கண்களுக்கும், சருமத்திற்கும் நன்மை தரும். மேலும் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஏனெனில் இதில் கலோரிகள் இல்லை.
credit: freepik
பச்சை மிளகாயில் இருக்கும் பீட்டா கரோட்டின் இதயம் நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் பச்சை மிளகாய் சிறந்த ஆன்டி ஆக்சிடெண்ட் கொண்டது.
credit: freepik
இது ஆன்டி ஆக்சிடெண்ட் பண்புகளை கொண்டிருப்பதால் நுரையீரல் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவு.
credit: freepik
சிவப்பு மிளகாயில் இருக்கும் கேப்சைசின் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். மனநிலையை மேம்படுத்தும் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாகவும் தூண்டும்.
credit: freepik
இது மற்ற வைட்டமின்கள் உடலில் போதுமான அளவு உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும், நோய்களுக்கு எதிராக போராடவும் துணைபுரியும்.
credit: freepik
சிவப்பு மிளகாயில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சமீபத்திய ஆய்வுகளின்படி, ரத்த சர்க்கரையை குறைக்க சிவப்பு மிளகாய் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
credit: freepik
இதய நோய்களின் அபாயத்தை குறைப்பதிலும் சிவப்பு மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் ரத்த உறைவை தடுக்கவும் செய்யும்.
credit: freepik
Explore