கடுமையாக பயிற்சி செய்வதாலோ, உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றுவதாலோ மட்டும் உடல் எடை குறைந்து விடாது. சில எளிய வகை பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்கும் செயல்முறை விரைவாக நடைபெற வழிவகை செய்யலாம்.
credit: freepik
ஒரே நேரத்தில் எழுந்திருங்கள்: தினமும் ஒரே நேரத்தில் எழுந்திருக்கும்போது வளர்சிதை மாற்றம் நிலைபெறும். சோர்வாக உணர்வது தவிர்க்கப்படும். சரியான நேரத்துக்குள் சாப்பிடுவதால் உணவு அட்டவணையையும் சீராக பின்பற்ற முடியும்.
credit: freepik
காபி குடிப்பதற்கு முன்பு தண்ணீர் பருகுங்கள்: காலையில் எழுந்ததும் காபி பருகும் பழக்கத்தை தவிருங்கள். முதலில் 400 முதல் 500 மில்லி லிட்டர் தண்ணீர் குடிப்பது செரிமான செயல்பாட்டை தூண்டி விடும். உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
credit: freepik
உடலுக்கு அசைவு கொடுங்கள்: காலையில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய முடியாவிட்டாலும் உடல் அசைவுக்காக 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள். இந்த காலை நேர உடல் அசைவு மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் அளவை குறைக்க உதவும்.
credit: freepik
சூரிய ஒளியை சருமத்தில் படர விடுங்கள்: சூரிய ஒளி, வைட்டமின் டி உற்பத்திக்கு மட்டுமின்றி சர்க்காடியன் தாளத்தை மீட்டமைக்கவும் உதவிடும். இந்த அதிகாலை சூரிய ஒளி சரியான நேரத்தில் மெலடோனின் (தூக்க ஹார்மோன்) செயல்பாட்டை கட்டுப்படுத்தி விழிப்புடன் வைத்திருக்க உதவும்.
credit: freepik
காலை உணவைத் தவிர்க்காதீர்கள்: காலையில் இருந்து வயிறு காலியாக இருந்தால் மதியம் பசி அதிகரித்து அதிக சர்க்கரை மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட வாய்ப்பிருக்கிறது. காலை அதிகமாக சாப்பிட வேண்டும் என்றில்லை.
credit: freepik
காலை உணவை அதிகமாக சாப்பிட வேண்டும் என்றில்லை. முட்டை, யோகர்ட், புரதம் நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்ளலாம். அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை நிலை நிறுத்தவும், பசியை குறைக்கவும், உடலின் ஆற்றல் அளவை சீராக வைத்திருக்கவும் உதவும்.