கம்பங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Photo: MetaAI
தினமும் சிறிதளவு கம்பங்கூழ் குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியடையும். வெயில் காலத்தில் தவிர்க்கக்கூடாத தானியம் கம்பு ஆகும்.
Photo: MetaAI
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் களைப்பு, நீர்ச்சத்து இழப்பை போக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது.
Photo: MetaAI
சிறு தானியங்களிலேயே அதிக அளவாக கம்பு தானியத்தில் 11.8 சதவீதம் புரதச்சத்து உள்ளது.
Photo: MetaAI
ஆரோக்கியமான சருமம், தெளிவான கண்பார்வைக்கு தேவையான வைட்டமின்-ஏ சத்தை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் என்பது கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.
Photo: MetaAI
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கம்பு தானியத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் இதன் கிளைசெமிக் குறியீடு காரணமாக உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
Photo: MetaAI
கம்பு தானியத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. மலச்சிக்கலை தடுக்க கம்பு தானிய உணவு உதவுகிறது.
Photo: MetaAI
கம்பு உணவை அடிக்கடி உட்கொள்ளும்போது ரத்தத்தில் இருக்கும் செல்கள் ஆக்சிஜன் உறிஞ்சுவதை அதிகப்படுத்துகிறது. இதனால், தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைகிறது.
Photo: MetaAI
Explore