பெர்சிமன் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்.!!

பெர்சிமன் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்.!!

Published on
வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைத்துப் பார்க்க வேண்டிய பழங்களில் ஒன்று தான் இந்த சீமை பனிச்சை பழம் என்று அழைக்கப்படும் பெர்சிமன் (persimmon). இதன் தாவரவியல் பெயர் டயோஸ்பரஸ் காகி.
பார்ப்பதற்கு தக்காளிப் பழம் போன்று இருக்கும் இது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் போன்றவற்றையும் அதிகமாக பெற்றுள்ளன.
எல்லா நாடுகளிலும் இது மிகவும் பிரசித்தி பெற்றுள்ள இது ஜப்பானின் தேசிய பழமாக பெருமைபடுத்தப்படுகிறது.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க துணை புரியும்.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com