தண்ணீரை எவ்வளவு நேரம் கொதிக்க வைத்து குடிப்பது நல்லது?
using all photo freepik
மழைக்காலம் தொடங்கிவிட்டதால், நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்க வேண்டும்.
குறிப்பாக நீரை நன்கு கொதிக்கவைத்து குடிப்பது நல்லது. கொதிக்க வைப்பதன் முதன்மை நோக்கம் நீரில் கலந்திருக்கும் பாக்டீரியா, வைரஸ்கள், புரோட்டோசோவா உள்ளிட்ட நோய்க்கிருமிகளை கொல்வதாகும். ஏனெனில் அவை நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும்.
நீரை அதிகபட்சமாக 100 டிகிரி செல்சியஸ் கொதி நிலைக்கு சூடாக்கும்போது இந்த நுண்ணுயிரிகளில் பெரும்பாலானவை அழிந்துவிடும். இதனால் நீரினால் பரவும் நோய் அபாயம் குறையும்.
இந்த நுண்ணுயிர் நோய்க்கிருமிகளை கொல்வதற்கு நீரை ஒரு நிமிடம் கொதிக்க வைத்தாலே போதுமானது. நீரில் சூடு குறைந்ததும் பருகிவிடலாம்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற கடல் மட்டத்திற்கு 6,500 அடிக்கும் மேல் உயரமாக அமைந்திருக்கும் இடங்களில் நீரை 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு பருகலாம்.
ஆர்.ஓ. போன்ற சுத்திகரிக்கப்பட்ட நீரை கொதிக்க வைத்துத்தான் குடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனெனில் பலகட்ட வடிகட்டுதலுக்கு பிறகு தண்ணீரை சுத்திகரித்து கொடுப்பதால் சூடுபடுத்த வேண்டியதில்லை.
ஆர்.ஓ. தண்ணீரில் பலகட்ட வடிகட்டுதலுக்கு பிறகு தாதுக்கள் குறைவாகவே இருக்கும். அதை மேலும் கொதிக்க வைப்பது கனிம உள்ளடக்கத்தை மேலும் குறைக்கக்கூடும்.