வரலாற்று புகழ்மிக்க காண கிடைக்காத காஞ்சிபுரம் சுற்றுலாத்தலங்கள்..!

கைலாசநாதர் கோவில் : இந்த கோவில் 7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் ராஜசிம்மனால் கட்டப்பட்டதாகும். இங்குள்ள சிற்ப்பங்களையும், இயற்கை வண்ணங்களை கொண்டு வரையப்பட்ட ஓவியத்தையும் காண, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி வருகின்றனர்.
காமாட்சி அம்மன் கோவில்: காஞ்சி மாநகரின் மையப்பகுதியில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கே காமாட்சி அம்மன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். காஞ்சிமாநகரில் அம்மனுக்கு என்று தனி சன்னிதியாக இக்கோவில் மட்டும் திகழ்வதாக போற்றப்படுகிறது.
வைகுண்ட பெருமாள் கோவில்: 8 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நத்திவர்மனால் இக்கோவில் கட்டப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலில் உள்ள சிற்பங்கள் மிகவும் புகழ் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வரதராஜ பெருமாள் கோவில்: 23 ஏக்கர் நிலப்பரப்பில் 19 கோபுரங்களும் 400 தூண் மண்டபங்களையும் கொண்டு திகழும் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். கலைநயமிக்க சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் நிறைந்த இக்கோவிலை உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி பார்த்து ரசிக்கின்றனர்.
உலகளந்த பெருமாள் கோவில்: விஷ்ணு பகவானின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதார பிரம்மாண்ட சிற்பத்துடன், ஒருகாலை தூக்கி உலகை அளக்கும் கோலத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இது காஞ்சியின் முக்கிய சுற்றுலாத்தலமாக கருதப்படுகிறது.
மசூதிகள்: காஞ்சிமாநகரில் இரண்டு முக்கிய மசூதிகள் அமைந்துள்ளன. இம்மசூதிகள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் நவாப்களால் கட்டப்பட்டுள்ளது. இம்மசூதிகள் ஜமா மஸ்ஜித் என அழைக்கப்படுகிறது. மசூதியின் உள்ளே 108 சிவலிங்கம் அமைக்கப்பட்டு மத ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கிறது.
சகுந்தலா ஜகந்நாதன் அருங்காட்சியகம் (நாட்டுப்புற கலைகள்) : 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாட்டுப்புற கலைகள் சர் சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பழங்காலப் பொருட்களான பாரம்பரிய ஓவியம், பழங்கால பாம் இலைகள், இசைக்கருவிகள்,கற்சிலைகள், பாரம்பரிய உடை அலங்காரம் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
Explore