சுவையான உருளைக்கிழங்கு ரைத்தா செய்வது எப்படி?

நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு ரைத்தா அருமையாக இருக்கும். இன்று இந்த ரைத்தாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 100 கிராம், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 1, புளிக்காத தயிர் -1 கப், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 1 டீஸ்பூன்,கொத்தமல்லி ஆகியவை.
தாளிக்க : கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவை.
செய்முறை : உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தயிருடன் உப்பு கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் தளிப்பில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, நன்றாக கிளறவும்.
இந்த கலவையை தயிருடன் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான உருளைக்கிழங்கு ரைத்தா ரெடி.
Explore