இது தெரியாம போச்சே..குற்றாலம் அருகில் இத்தனை சுற்றுலா தலங்களா?

பாபநாசம் அணை : குற்றாலத்திலிருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் அணை அமைந்துள்ளது. 1942 -ம் ஆண்டு முதன்முதலில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட ஒரு அழகிய அணையாகும்.
காரையாறு அணை : நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம் அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பயணிகள் செல்ல படகு சவாரிகள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இங்கு வருகின்றனர்.
படகு குழாம் : குற்றாலத்தில் ஐந்தருவி அருகே மேலவெண்ணமாடைகுளம் செல்லும் வழியில் படகு குழாம் அமைந்துள்ளது. பிரதான அருவிக்கும் ஐந்தருவிக்கும் இடையேயான படகு சவாரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு தண்ணீரில் பயணம் செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய இடமாக அமைந்துள்ளது.
பாம்பு பூங்கா : குற்றாலத்தில் ஐந்தருவி அருகில் அமைந்துள்ளது பாம்பு பூங்கா. பாம்பு பண்ணையில் பல்வேறு வகையான பாம்புகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பாம்பு பூங்காவிற்கு வருவதோடு அருகிலுள்ள கண்கவர் இடங்களான சிறுவர் பூங்கா மற்றும் மீன் பண்ணைகளையும் பார்த்து ரசித்து விளையாடி மகிழ்கின்றனர்.
குண்டாறு அணை : தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் குண்டாறு அணை அமைந்துள்ளது. இங்கு நிறைந்துள்ள இயற்கையே ரசிக்க குடும்பம் குடும்பமாக படையெடுத்து வருகின்றனர்.
மணிமுத்தாறு: குற்றாலத்திலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இயற்கையாகவே மழை நீர் சேகரித்து வைப்பதற்காக கட்டப்பட்டது . ஏராளமான வனவிலங்குகளை காண்பதற்கும் ஏற்ற சிறந்த சுற்றுலா தலமாக இந்த இடம் விளங்குகிறது.
தோரணமலை முருகன் கோவில் : இது தென்காசி மாவட்டத்தில் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுமார் 800 அடி உயரம் கொண்ட தோரணமலை உச்சியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க 1193 படிகள் ஏற வேண்டும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.
அகஸ்தியர் அருவி : குற்றாலத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவி சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கொட்டுகின்ற அழகை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ரசிக்கின்றனர்.