இது தெரியாம போச்சே..செல்போனை ஏன் 100 சதவீதம் சார்ஜ் செய்யக்கூடாது?

all photo using freepik
செல்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்யும் வழக்கத்தை சிலர் பின்பற்றுவதுண்டு, 100 சதவீதம் சார்ஜ் ஆன பிறகும் இரவு முழுவதும் செல் போன் சார்ஜ் கனெக்ஷனுடனே இருக்கும்.
அப்படி சார்ஜ் செய்வது நல்லதல்ல. நீண்ட நேரம் தொடர்ந்து சார்ஜ் நிலையிலேயே வைத்திருப்பது படிப் படியாக பேட்டரியின் ஆயுளை குறைத்துவிடும்.
ஏனெனில் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆன பிறகும், சார்ஜ் நிலையிலேயே நீடிப்பது பேட்டரிக்குள் வெப்பத்தையும், அழுத்தத்தையும் உருவாக்கும். அது படிப்படியாக பேட்டரியின் செயல் திறனை குறைத்துவிடும்.
அதனால்தான் பல செல்போன் நிறுவனங்கள் 80 சதவீதம் மட்டுமே சார்ஜ் செய்வதற்கு பரிந்துரைக்கின்றன. அதே சமயத்தில் 20 சதவீதத்துக்கு குறைவான நிலையில் செல்போனில் சார்ஜ் இருப்பதும் நல்லதல்ல.
எப்போதும் செல்போனில் சார்ஜ் அளவு 20 சதவீதம் முதல் 80 சதவீதத்துக்குள் இருப்பது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பேட்டரி குறைந்த அழுத்தத்திலேயே வைக்கப்பட்டிருக்கும்.
சார்ஜ் சுழற்சியும் மெதுவாக நடந்து முடியும். இதன் விளைவாக பேட்டரிக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.
சில செல்போன் நிறுவனங்கள் 80 சதவீதம் முதல் 90 சதவீதத்துக்குள் சார்ஜ் செய்யும் வரம்பை நிறுத்துவதற்கு ஏற்ப ஆப்ஷனை வழங்குகின்றன. இது நீண்ட காலத்திற்கு பேட்டரியின் செயல்திறனை உறுதி செய்வதையும், அடிக்கடி பேட்டரி மாற்றுவதற்கான தேவையை குறைப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கிறது.
செல்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்ய விடாதீர்கள். எப்போதும் செல்போனுக்கு பொருத்தமான, ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்தவும். வெப்ப மான பகுதியில் இருந்தால் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். செல்போன் அதிக வெப்பமடைந்தாலும் சார்ஜ் செய்யக் கூடாது.
Explore