பால்: பால் குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும். இதில் அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்து உள்ளது. பால் சில குழந்தைகளுக்கு பிடிக்காது. அப்போது மாற்று உணவாக பாலில் இருந்து கிடைக்கும் பன்னீர், தயிர் இவற்றை கொடுத்து பழக்கலாம்.
credit: freepik
பச்சை காய்கறிகள்: பீன்ஸ் அதிகமாக எடுக்கும் போது எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும். முட்டைகோஸ் சாப்பிட்டால் நன்றாக வளரலாம். இதர காய்கறிகள் அனைத்தும் உணவில் சேர்ப்பதை குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பழக்கப்படுத்த வேண்டும்.
credit: freepik
முட்டை: உயரமாக வளர முட்டை எடுத்து கொள்வது சிறப்பு. இது புரதச்சத்து நிறைந்தது. குழந்தைகளின் இதர வளர்ச்சியிலும் இது பங்கு அளிக்கிறது. உங்கள் குழந்தைக்கு பிடித்த வகையில் முட்டையை சமைத்துக் கொடுக்கலாம்.
credit: freepik
கேரட்: கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் எலும்பு மறு உருவாக்கத்திற்கு உதவுகிறது. இது உடலில் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்தி எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
credit: freepik
கீரைகள்: கீரைகள் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளில் கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இவை அனைத்தும் எலும்பு அடர்த்தியை வலுப்படுத்தி, எலும்புகளின் வளர்ச்சியை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
credit: freepik
மீன்: சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை எலும்புகளை வலுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
credit: freepik
பருப்பு வகைகள்: ராஜ்மா, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு போன்ற பல்வேறு பருப்பு வகைகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் புரதச்சத்து உள்ளது. கொண்டைக்கடலையை மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
credit: freepik
சீரான உணவுடன், போதுமான உடற்பயிற்சி மற்றும் ஓய்வு எடுப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியம்.