கீரை வகைகள் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கு துணை நிற்பவை. கல்லீரலில் உள்ள நொதிகளை அதிகரிக்கவும், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவி புரியும்.
credit: freepik
சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவது நல்லது. இதில் இரும்புச் சத்து அதிகமிருக்கிறது. ஹீமோகுளோபின் அளவுகளையும், ரத்த ஓட்டத்தையும் சீராகப் பராமரிக்கவும், ரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.
credit: freepik
பீட்ரூட் சாறு இயற்கையாகவே உடலில் நச்சுத்தன்மையற்ற நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கல்லீரல் வீக்க பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும்.
credit: freepik
எலுமிச்சை சாறு உங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழித்து, உடலில் உள்ள செரிமானப் பாதையை சரி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
credit: freepik
குடிநீர், இயற்கையாகவே ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியை மேற்கொள்கிறது. சிறுநீரகம் மூலம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் நீக்க உதவும்.
credit: freepik
மஞ்சள் ஒரு சக்தி நிறைந்த மூலிகையாகும்.இது அனைத்து நோயையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. மஞ்சள் நம் இரத்தத்தை சுத்திகரிக்கவும் மற்றும் இரத்தத்தில் உள்ள கிருமிகளை அழிக்கவும் உதவுகிறது.
credit: freepik
துளசி, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கவும், இரத்தம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திலிருந்து நச்சுகளை அகற்றவும் துளசி ஒரு சிறந்த மூலிகையாகும்.