பூனைகள் பற்றிய சுவாரசிய தகவல்கள்.!!

பூனை இனத்தை பாதுக்காக்கும் வகையில், சர்வதேச விலங்குகள் நல நிதியத்தால், கடந்த 2002-ஆம் ஆண்டு சர்வதேச பூனை தினம் அறிவிக்கப்பட்டது.
பூனைகளால் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஒலிகளை உருவாக்க முடியும். பூனைகள் தங்களைப்போல ஆறு மடங்கு உயரத்தில் குதிக்கும்.
பூனைகள் மரத்திலிருந்து இறங்கும்போது முதலில் தலையை முன்னிருத்த முடியாது, இவை தங்களின் நகங்கள் செல்லும் திசையை நோக்கிதான் பயணிக்கின்றன.
பூனைகளால் தங்களின் காதுகளை தனித்தனியாக கட்டுப்படுத்த முடியும். காதுகளை 180 டிகிரிக்கு நகர்த்தவும் முடியும்.
எப்படி ஒவ்வொரு மனிதருக்கு தனித்துவமான கைரேகைகள் இருக்கிறதோ.. அதேபோல ஒவ்வொரு பூனையின் மூக்கும் தனித்துவமானது.
பூனைகளை பொறுத்தவரை தங்களை சுத்தம் செய்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருக்குமாம்.இதனாலேயே தன்னை நாக்குகளால் நக்கி சுத்தம் செய்து கொள்கின்றன.
பூனைகள் தங்கள் பாதங்கள் வழியாக வியர்க்கின்றன. மேலும் பூனைகளின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மைக் கொண்டது.
பூனைகள் தங்களின் வாழ்நாளில் 70% தூங்கிக்கொண்டுதான் இருக்கிறதாம்.
பூனைகளில் உலகம் முழுவதும் சுமார் 40 வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், 8 பூனை வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது
Explore