உலக நாடுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

உலகின் பெரும்பாலான நாடுகளில் கொசுக்கள் இருக்கும். ஆனால் ஐஸ்லாந்தில் ஒரு கொசுக்கூட இல்லையாம்.
பிரான்சில் ஒருவர் இறந்தபிறகும் சட்டப்படி அவரைத் திருமணம் செய்துகொள்ள முடியுமாம்.
உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லிமீட்டர் உயரம் வளர்கிறதாம்.
ஜப்பானில் ரெயில்கள் நேரம் தவறாது. ஒரு வருடம் முழுவதும் தாமதமாக வந்ததற்கு சராசரி கணக்கிட்டாலும் 1 நிமிடத்தை தாண்டாதாம்.
சிங்கப்பூரில் சூயிங் கம்(Chewing gum) விற்பனைக்கு தடை.
கோடைக்காலத்தின்போது நார்வேயின் சில இடங்களில் 24 மணி நேரமும் சூரியன் தெரியுமாம்.
ஆஸ்திரேலியாவில் கங்காருக்களின் எண்ணிக்கை மக்கள் தொகையைவிட அதிகமாம்.
அண்டார்டிகாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக மனிதர்கள் யாருமே அங்கு நிரந்தரமாக வாழ்வதில்லையாம்.
Explore