கார்ன் ப்ளார் ஆரோக்கியமானதா? தினமும் சமையலுக்கு பயன்படுத்தலாமா?

கார்ன் ப்ளார் என்பது 90 சதவிகிதம் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே கொண்டது.
சோளத்திலிருந்து எடுத்தாலும் அது சுத்திகரிக்கப்பட்டு, எல்லா சத்துகளும் நீக்கப்பட்ட வெறும் மாவுச்சத்துதான்.
கார்ன் ப்ளாவரில் புரதச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் எதுவுமே கிடையாது.
நீரிழிவு உள்ளவர்கள் இப்படி வெறும் கார்போஹைட்ரேட் மட்டும் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் மக்காச்சோள மாவில் புரதச்சத்து அதிகம் உள்ளது.
அதாவது 100 கிராம் சோள மாவில் 10 கிராம் புரதம்,10 கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் 4 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கிறது.
கார்ன் ப்ளார் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமான பாஸ்பரஸ் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துகள் உள்ளன.
பதப்படுத்தாமல், சிறுதானியமான சோளத்திலிருந்து அப்படியே எடுக்கப்படும் இந்த மாவில் தோசை, ரொட்டி போன்றவை செய்யலாம்.
இந்த மாவையும், வெள்ளை வெளேரென கிடைக்கும் கார்ன் ப்ளாரையும ஒன்று என குழப்பிக்கொள்ள வேண்டாம்.
Explore