குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழம் கொடுப்பது நல்லதா? கெட்டதா?

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் பல நிறைந்த ஆரஞ்சு பழத்தினை குழந்தைக்கு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தினை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் ரத்த சோகை பிரச்சினையை குறைக்கலாம்.
குழந்தைகள் எதிர்க்கொள்ளும் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்க ஆரஞ்சு பழம் பெரிதும் உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் காணப்படும் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள், குழந்தைகளுக்கு உண்டாகும் ரிக்கெட்ஸ் பிரச்சினைகளை தடுத்து எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
ஆரஞ்சு பழங்களில் காணப்படும் வைட்டமின் ஏ, பிளவனாய்டுகள், குழந்தைகளின் கண் பார்வை ஆரோக்கியத்தை காக்கக்கூடும்.
ஆரஞ்சு பழத்தில் காணப்படும் அமிலத்தன்மை, கால்சியம் போன்றவை, குழந்தைகளின் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடும்.
பொன்னுக்கு வீங்கி (Mumps) எனப்படுவது குழந்தை பருவத்தினை அதிகம் தாக்கும் ஒரு வைரஸ் பாதிப்பு ஆகும். இந்த வைரஸ் தொற்றை தவிர்ப்பதில் ஆரஞ்சு பழம் பெரிதும் உதவியாக உள்ளது.
Explore