காதில் அழுக்கு சேருவது (குருமி) இயல்பான ஒன்று. பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி கொண்டது.
சிலர் இந்த அழுக்கை சுத்தம் செய்யமாட்டார்கள். ஏனென்றால் அதுவே சுத்தப்படுத்திக் கொள்ளும்.
சிலருக்கு காது கேட்கவில்லை, காதில் வலி உள்ளது, காது அடைத்ததுபோல உள்ளது என்றால் மட்டுமே குருமியை சுத்தம் செய்வோமே தவிர, அதனால் வேறு எந்த பிரச்சனையும் இல்லை.
வீட்டில் எல்லாம் குளித்துவிட்டு வந்த உடனே காதை குடைவது வழக்கம்.
ஆனால் ஈரத்தில் காட்டன் பட்ஸை போட்டால் இன்பெக்ஷன் ஆகுமே தவிர, காது சுத்தமாகாது.
சிலநேரங்களில் சிலருக்கு குருமியே இருக்காது. அவர்கள் காதில் வேகமாக பட்ஸ் போடும்போது ஜவ்வில் இடித்துவிடுவார்கள். அப்போது செவித்திறன் பாதிக்கப்படும்.