கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ரத்து… காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனாவும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர் .
உலகக் கோப்பையை முதல்முறையாக வென்ற கையோடு மந்தனா, முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 23-ந்தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமணநாளன்று திடீரென மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தந்தையின் உடல் நலம் பாதிப்பால் திருமணத்தை தள்ளி வைப்பதாக மந்தனா தரப்பில் அறிவிக்கப்பட்டது.
திருமணநாளன்று திடீரென மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தந்தையின் உடல் நலம் பாதிப்பால் திருமணத்தை தள்ளி வைப்பதாக மந்தனா தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மந்தனாவின் காதலர் பலாஷ் முச்சல் குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு தகவல்கள் வலம் வந்தன. அவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் இடையே நடந்த காதல் உரையாடலை அறிந்த பிறகே மந்தனா திருமணத்தை நிறுத்தியதாகவும் தகவல்கள் பரவின.
அத்துடன் மந்தனா, திருமணத்துக்கு முந்தைய நாள் மெஹந்தி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நிச்சயதார்த்த படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கினார். இதனால் மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் முச்சலுடன் திருமணம் கிடையாது என்று மந்தனா நேற்று அறிவித்தார். இது குறித்து 29 வயதான மந்தனா வெளியிட்டு அறிக்கையில், இந்த விஷயத்தில் இருந்து மீண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு எங்களுக்கு அவகாசம் அளிக்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
Explore