மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரத்தில் இவ்வளவு சிறப்புகளா?

மதுரை மாநகரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது.
நகரின் மைய பகுதியில் மிக பிரமாண்டமான கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும்.
மிகப்பெரிய கோவிலாக கருதப்படும் இந்த கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது.
இந்த கோவில் 17 ஏக்கர் பரப்பளவில்அமைந்துள்ளது. கோவிலின் மொத்த நீளம் 847 அடி. அகலம் 792 அடி ஆகும்.
ஆடி வீதியில் அமைந்துள்ள பிரகார சுவர்கிழக்கு மேற்காக 830 அடியிலும், வடக்கு கிழக்காக 730 அடியிலும் அமையப்பெற்றுள்ளது
மீனாட்சி அம்மன் கோவிலில் மதுரைக்கு அழகு சேர்ப்பது அதன் கோபுரங்களும், அதில் உள்ள கலாசார சிற்பங்களும்தான். மொத்தம் 12 கோபுரங்கள், தங்கத்திலான கோபுரங்கள் 2 என 14 கோபுரங்கள் உள்ளன.
இதில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என ஒவ்வொரு திசைக்கும் ஏற்றாற்போல் 4 பிரமாண்ட வெளிப்புற கோபுரங்கள் அமையப்பெற்றுள்ளன. இவை அனைத்தும் 9 நிலைகள் கொண்டவை ஆகும். இந்த 4 கோபுரங்களும் ராஜகோபுரங்கள் என்று அழைக்கப்படுகிறது.
மீனாட்சி அம்மன் மதுரையில் பிறந்ததாக கருதப்படுவதால் அம்பாளின் சன்னதியே முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது
மீனாட்சி அம்மன் சிலை மரகதத்தால் ஆனது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவர் கடம்ப வனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும், இந்த சிவசக்தி தளத்தையும் அமைத்ததாக கருதப்படுகிறது.
Explore