வெங்காயத்தை சுற்றிலும் இப்படி கருப்பு அச்சு உள்ளதா..? பிரச்சினை ஏற்படலாம்.!!

பொதுவாக வெங்காயத்தில் காணப்படும் கருப்பு அச்சு ஆஸ்பெர்கிலஸ் நைகர் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை பூஞ்சை மண்ணில் காணப்படுகிறது.
வெங்காயத்தை உரிக்கும்போது சில வெங்காயங்களில் கருப்பு அச்சு இருப்பதை பார்த்திருக்கிறீர்களா..? இப்போது வரும் வெங்காயங்களில் அதிகமாக இப்படி கருப்பு அச்சுக்களை காண முடிகிறது.
வெங்காயத் தோலை உறிக்கும்போது கருப்பு அச்சு இருந்தால், அப்படிப்பட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டால் மியூகோர்மைகோசிஸ் வருமா என்கிற பயமும் பலருக்கு உண்டு.
இந்த கருப்பு அச்சு உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தை உண்டாக்காது என்றாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அழற்சி இருப்பவர்கள் இந்த கருப்பு அச்சு இருக்கும் வெங்காயத்தை தவிர்ப்பது நல்லது என்கின்றனர். ஏனென்றால் இது பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும்.
வெங்காயத்தில் இருக்கும் கருப்பு அச்சு காற்றில் பறந்து அதை நுகரும்போது ஆஸ்துமா பாதிப்பை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது.
நீங்கள் வெங்காயத்தை பிரிட்ஜில் ஸ்டோர் செய்கிறீர்கள் எனில் இந்த கருப்பு அச்சை நீக்கிவிட்டு செய்ய வேண்டும். அதை அப்படியே வைப்பது மற்ற உணவுப்பொருட்களுடன் கலந்து உணவை விஷமாக மாற்றலாம்.
Explore