இது உண்மைதானா? புடலங்காயில் இவ்வளவு நன்மைகளா?

இது உண்மைதானா? புடலங்காயில் இவ்வளவு நன்மைகளா?

Published on
புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொரியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு. எனவே கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்.
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர வளர்ச்சி உள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.
தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.
குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.
நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்து. மேலும் கண் பார்வை திறனை அதிகரிக்கச் செய்கிறது.
இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும். வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.
புடலங்காய் ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறதாகவும், காமத்தன்மையை பெருக்கும் வல்லமை அதற்கு உண்டு எனவும் கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com