என்றா இது 😲.. எறும்புகளின் ஆயுட்காலம் இத்தனை ஆண்டுகளா?
எறும்புகள் பற்றிய சில ஆச்சரியமான தகவல்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
உலகம் முழுவதிலும் சுமார் 13,800-க்கும் மேற்பட்ட எறும்பு இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எறும்புகள் தங்கள் உடல் எடையை விட 10 முதல் 50 மடங்கு வரை சுமக்கும் திறன் கொண்ட வலிமையான உயிரினமாகும்.
எறும்புகளுக்கு நுரையீரல் இல்லாததால், அவற்றால் நாள் முழுவதும் கூட நீருக்கடியில் உயிர்வாழ முடியும்.
எறும்புகளுக்கு நுரையீரல் கிடையாது. ஆனால், இவைகள் உடலில் இருக்கக்கூடிய துளைகளின் வழியாக சுவாசிக்கின்றன.
மனிதர்களை விட எறும்புகள் தங்கள் உடலின் விகிதத்தில் பெரிய தசைகளை கொண்டுள்ளன.
எறும்புகளுக்கு காதுகள் கிடையாது. அவை தரையில் ஏற்படும் அதிர்வுகளை தங்கள் கால்களின் வழியாக உணர்கின்றன.
உலகின் மிகப்பெரிய எறும்பு பனாமா காடுகளில் காணப்படும் புல்லட் எறும்பு ஆகும். அவை 1.6 அங்குலம் வரை வளரக்கூடியவை.
எறும்புகள் உணவு தேடும் போது, பெரோமோன் (Pheromone) எனும் இரசாயனத்தை தனது பாதையில் விட்டுச் செல்கின்றன. இந்த பாதையின் மூலம் தான் மற்ற எறும்புகள் பின்தொடர்கின்றன.
ஒரு எறும்பின் சராசரி ஆயுட்காலம் 15 ஆண்டுகள் ஆகும். எறும்புகள் ஒரு நாள் கூட தூங்காமல் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேலைகளை செய்யக்கூடியவை ஆகும்.