சின்ன வயசுல ஒரு முறையாவது சாப்பிட்டு இருப்பீங்க..கூட்டாஞ்சோறு.!!

தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - 2 கப், துவரம் பருப்பு - 3/4 கப், காய்கறிகள் (வாழைக்காய், கத்தரிக்காய், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட்) - தேவையான அளவு, தேங்காய் துருவல் - 1/4 கப், சின்ன வெங்காயம் - 20, பூண்டு, சீரகம், மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, புளி - சிறிதளவு, நெய், கடுகு, உளுத்தம் பருப்பு
செய்முறை: முதலில் அரிசி மற்றும் பருப்பை கழுவி, ஒன்றாகச் சேர்த்து வேகவைக்கவும்.
பின் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு, சிவப்பு மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து கத்தரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளை நறுக்கிக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.
வதங்கிய காய்கறிகளுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து, புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேகவிடவும்.
வேகவைத்த அரிசி, பருப்பு கலவையை காய்கறி மசாலாவோடு சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
இறுதியில், நெய் காயவைத்து கடுகு தாளித்து கூட்டாஞ்சோறில் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
Explore