சம்மரில் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் பலாப்பழம்..!

சம்மரில் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் பலாப்பழம்..!

Published on
பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், கால் சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஏ நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்கிறது.
பலா, குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்தும்.
இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்குவதுடன், எலும்பு தேய்மானம், மூட்டு வலி பிரச்சினைகளையும் குணப்படுத்த உதவுகிறது.
பலாப்பழம், ரத்தத்தில் உள்ள உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இதில் உள்ள கார்போஹைட்ரேட், உடலில் ஆற்றலை அதிகரிக்கும்.
லாப்பழத்தில் காப்பர் சத்து நிறைந்துள்ளதால் தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்து, தைராய்டு ஹார்மோன் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கிறது.
இதிலுள்ள வைட்டமின் பி-6, ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டின் அளவைக் குறைத்து, இதய பிரச்சினைகளை குணப்படுத்தும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com