ஜான் சீனா ஓய்வு : 23 ஆண்டுகள்..17 முறை சாம்பியன்..!!
2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமான ஜான் சீனா தன்னுடைய தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களிடையே சூப்பர்ஸ்டாராக உயர்ந்தார்.
அவருடைய என்ட்ரி இசை பலருடைய ரிங்டோனாக இருந்தது. மேலும் WWE ஜாம்பவான்களான தி ராக், ட்ரிபிள் ஹெச் ரேண்டி ஆர்ட்டன், தி அண்டர்டேக்கர் உள்ளிட்டொருடன் மோதியுள்ளார்.
மல்யுத்தம் தவிர ’தி சூசைட் ஸ்குவாட்’, ‘ப்ரீலான்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், டிசி காமிக்ஸின் பிரபலமான ‘பீஸ்மேக்கர்’ வெப் தொடரில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
WWE மல்யுத்த போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்ற உலக புகழ்பெற்ற வீரர் ஜான் சீனா.
23 ஆண்டுகளாக WWE மல்யுத்தத்தில் அசத்தி வந்த ஜான் சீனா சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். டிசம்பர் 13-ந்தேதி நடைபெறும் போட்டிதான் தனது கடைசி போட்டி என்று கூறியிருந்தார்.
அதன்படி தனது கடைசி போட்டியில் ஜான் சீனா, கன்தர் உடன் மோதினார். இந்த போட்டியில் ஜான் சீனா தோல்வியை தழுவினார். இதைத் தொடர்ந்து தோல்வியுடன் ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
அடுத்த கட்டமாக ஜான் சீனா தனது முழு கவனத்தையும் சினிமா துறையில் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.