குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க முக்கிய வழிமுறைகள்!

credit: freepik
வைட்டமின் சி உணவுகள்: வைட்டமின் சி நிறைந்த உணவுகளை குளிர்காலம் முழுவதும் தவறாமல் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை, புரோக்கோலி, தக்காளி, கிவி, கொய்யா, பப்பாளி, மாதுளை ஆகியவற்றை அவசியம் உட்கொள்ள வேண்டும்.
credit: freepik
நீர்ச்சத்து அளவு: குளிர்காலத்திலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குளிர்காலத்தில் நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
credit: freepik
நீராவி குளியல்: கடுமையான குளிரில் இருந்து உடலை காப்பதோடு மட்டுமல்லாமல், நீராவி குளியல் பல நன்மைகளை அளிக்கிறது. இந்த குளியல் உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும், தசைகளை தளர செய்யும், தோல் வலிமையை கூட்டும் மற்றும் உடல் வலியை போக்கும்.
credit: freepik
தடுப்பூசி: குளிர் காலத்தில் காய்ச்சலும், வைரஸ் சார்ந்த நோய்த்தொற்றுகளும் வேகமாக பரவும். ஒவ்வொரு குளிர் காலத்திலும் இந்த நோய்த்தொற்றுகளால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை நீடித்தால் மருத்துவரிடம் ஆலோசித்து தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.
credit: freepik
சூரிய ஒளி: 'செரடோனின்' எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன் சுரப்ப தற்கு சூரிய ஒளி உதவிடும். இது நல்ல மனநலத்திற்கும் அவசியமானது. அதனால் சூரிய ஒளி குறைவாக இருந்தாலும் சில நிமிடங்களாவது வெயிலில் நேரம் செலவிடுங்கள்.
credit: freepik
வீட்டிற்குள் உடற்பயிற்சி: ஜிம் அல்லது வீட்டிலேயே பயிற்சி செய்தற்கான சூழலை உருவாக்குங்கள். ஒரே இடத்தில் மேற்கொள்ளக்கூடிய ஜம்பிங் ஜாக்ஸ், சிட்அப்ஸ், புஷ்அப்ஸ் போன்ற எளிய உடற்பயிற்சிகள் பலன் தரும்.
credit: freepik
இரவு நேர தூக்கம்: குளிர் காலத்தில் தூக்கம் மிக முக்கியம். தொடர்ந்து சில நாட்கள் தூக்கமின்மைக்கு ஆளானாலே உடல் நலக்குறைவு ஏற்பட்டு, நோய்கள் தாக்கும். எனவே குளிர் காலத்தில் முன்கூட்டியே தூங்கச் செல்லுங் கள்.
credit: freepik
உடல் பலவீனம்: உடல் சோர்வாக இருந்தால் ஓய்வு எடுங்கள். பசித்தால் சத்தான உணவை சாப்பிடுங்கள். மனதளவில் சோர்வாக இருந்தால் சமூக ஊடகங்களில் கவனம் செலுத்தாதீர்கள். தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் உடல் பலவீன மாக இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
credit: freepik
Explore