தன்னை ‘கரெக்ட் 😜' செய்வதற்கு 'டிப்ஸ்' தரும் கீர்த்தி ஷெட்டி!
@krithi.shetty_official
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பிறந்த அழகு மங்கை கீர்த்தி ஷெட்டி. இந்தி சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். கன்னக்குழி அழகியான கீர்த்தி ஷெட்டி தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் கீர்த்தி ஷெட்டியை 'தினத்தந்தி' நட்சத்திர பேட்டிக்காக அணுகினோம். உள்ளன்புடன் வரவேற்று உவகையுடன் பேச்சை கொட்டினார். வாங்க பார்க்கலாம்.
சினிமாவுக்கு நீங்கள் வந்தது எப்படி? என்னை பொறுத்தவரை சினிமாவுக்கு நான் வந்தது கடவுளின், இயற்கையின், பெற்றோரின் ஆசிர்வாதத்தால் மட்டுமே.
தமிழ் சினிமா - தெலுங்கு சினிமா. என்ன வித்தியாசம்? தமிழ், தெலுங்கு என்று பார்க்க முடியவில்லை. எல்லாமே சினிமா தான்.
கார்த்தி, ரவி மோகன், பிரதீப் ரங்கநாதன் பற்றி.... கார்த்தி சீனியர்-ஜூனியர் வித்தியாசமின்றி மரியாதை தருவார். திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு தருவார். ரவி மோகன் நம்பிக்கையான, மகிழ்ச்சியான மனிதர்.
எந்த நடிகை உங்களுக்கு போட்டி என்று நினைக்கிறீர்கள்? அந்த வார்த்தையே வேண்டாம் என்று நினைக்கிறேன். சினிமாவில் எதுக்கு போட்டி, பொறாமை. நமக்கு உண்டானதை செய்துகொண்டு போக வேண்டும்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் சினிமாவுக்கு வரமா, சாபமா? எது உண்மை, எது பொய் என்றே கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு சமூக வலைதளங்களை ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆட்டுவித்து வருகிறது. இது சினிமாவுக்கு மிகப்பெரிய ஆபத்து.
நடிக்க விரும்பும் கதாபாத்திரம்... படத்துக்கு படம் புதிய வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். 'இவள் இப்படித்தான் நடிப்பாள்' என்று யாரும் என் மீது முத்திரை குத்திவிடக்கூ டாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
படத்தை தாண்டி, நிஜத்தில் உங்களை 'கரெக்ட்' செய்வது எப்படி? அன்பானவராக, என்னை கவர்ந்திழுப்பவராக, அனைவருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவராக, எனக்கு பாசிட்டிவ் எனர்ஜியை அள்ளித் தருபவராக இருந்தால் வாய்ப்புண்டு.