இறைச்சிக்கு பதிலாக மீல் மேக்கர்..சைவ விரும்பிகளுக்கு அடித்த ஜாக்பாட்..!

மீல் மேக்கர் சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த உணவு தேர்வாகும், மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
மீல் மேக்கர் என்பது சோயா மாவிலிருந்து சோயாபீன் எண்ணெயைப் பிரித்தெடுத்த பிறகு கிடைக்கப்பெறுவது தான் இந்த சோயா சங்க் என்னும் மீல் மேக்கர்.
மீல் மேக்கரில் புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடல் எடையை குறைக்க துணை புரிகிறது.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மீல் மேக்கர் சிறந்த உணவாகும்.
மீல் மேக்கர் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை வாய்ந்தது.
இவற்றில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சீரான மாதவிடாய்க்கு உதவுகிறது.
Explore