வாய்க்கு ருசியான காடை கிரேவி..!

சப்பாத்தி, நாண், சாதம், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் காடை பெப்பர் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : காடை - 6 , மிளகாய் தூள் - 2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன், பெரிய வெங்காயம் - 3 , தக்காளி - 3, மிளகாய் - 2 , தயிர் - 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகு - 1/2ஸ்பூன், சீரகம் - 1/2 ஸ்பூன், சோம்பு - 1/4 ஸ்பூன், ஏலக்காய் - 2 , பட்டை - 2 இன்ச், தேங்காய் எண்ணெய் - தேவைக்கு ஆகியவை.
செய்முறை : காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொஞ்சம் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் ப.மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வேகவிடவும்.
பின்பு காடை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அடுத்து அதில் தயிர் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
காடை அரை வேக்காடு வெந்ததும் திரித்த தூள்களை சேர்த்து வேக விடவும். எண்ணெய் பிரிந்து வரும்வரை மிதமான தீயில் வேகவிடவும்
பின்பு எலுமிச்சை சாறு ஊற்றி கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும். நெய் சோறு, சப்பாத்தி, ரசம் சோறு ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
Explore