நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா..

நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் காலை, இரவில் சுவாமி -அம்பாள் வீதிஉலா மற்றும் சிறப்பு பூஜைகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவில் நேற்று காலை சுவாமி நடராஜ பெருமாள் பச்சை சாத்தி வீதிஉலா வந்தார். மாலை சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா சென்றார்.
இரவு 10 மணிக்கு தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் தேர் கடாட்சம் உலாவும் ரதவீதியும் சென்றனர். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
. 5 தேர்களும் அலங்காரம் செய்யப்பட்டு, புதிய வடங்களும் இணைக்கப்பட்டு உள்ளன. வாழை தோரணங்களும் கட்டப்பட்டு உள்ளன.
முன்னதாக அதிகாலையில் விநாயகர், முருகர் தேர்கள் இழுக்கப்படுகிறது. சுவாமி தேரை தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்படுகிறது. இறுதியாக சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படுகிறது.
Explore