பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
credit: freepik
பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர். பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...
credit: freepik
கீரை: கீரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
credit: freepik
பருப்பு: இதில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. எனவே இதை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பருப்பு மிகவும் நல்லது.
credit: freepik
ஓட்ஸ்: தினசரி ஆற்றலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் ஓட்சில் அதிகமாக உள்ளன. அவை மற்ற தானியங்களை விட அதிக புரதம் மற்றும் கொழுப்புச் சத்தை கொண்டிருக்கின்றன.
credit: freepik
பால்: பெண்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதற்கும், எலும்பு அமைப்பு பாதிக்கப்படுவதற்கும் அதிக ஆபத்து உள்ளது. பால் கால்சியத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் புரதம், பாஸ்பரஸ், காம்ப்ளக்ஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவையும் உள்ளன.
credit: freepik
புரோக்கோலி: பெண்கள் உண்ணவேண்டிய முக்கிய உணவுகளில் புரோக்கோலியும் முக்கியமானது. ஏனெனில் இது கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. கால்சியம் நிறைந்த, இது எலும்பு அடர்த்திக்கு முக்கிய பங்களிக்கிறது.
credit: freepik
பீட்ரூட்: இது நார்ச்சத்துக்கான சிறந்த மூலப்பொருளாகும். இது குடலை ஆரோக்கியமாக வைத்து செரிமான அமைப்பை சீராக்க உதவுகிறது. பீட்ரூட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கவும், உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
credit: freepik
பாதாம்: 1/4 கப் பாதாம் ஒரு முட்டையை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. இதில் மெக்னீசியமும் உள்ளது. இந்த உணவுகளை பெண்கள் தங்கள் உணவுகளில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு மிகவும் நல்லது.