புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் பிஸ்தா.!!

பிஸ்தா பருப்பில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.
பிஸ்தா பருப்பு ரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து, ரத்தத்தை சுத்தமாக்குகிறது.
பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.
பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிடும் போது, நமது நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பிஸ்தா அளிக்கிறது. இதனால் கருவின் வளர்ச்சி மேம்படுகிறது.
இந்த பருப்பில் உள்ள வைட்டமின் ஈ ஆனது புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.
இது உடலிலுள்ள கேட்ட கொழுப்புகளை கரைத்து, ஆரோக்கியம் தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இதனால் இதய நோய் அபாயம் குறையலாம்.
பிஸ்தாவில் நிறைந்திருக்கும் கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை ஊக்குவிக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களுக்கு பிஸ்தா சிறந்த தேர்வாகும்.
பெண்கள் தினமும் பிஸ்தா சேர்ப்பதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க செய்யலாம். இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.
Explore