பொங்கல் பண்டிகை..கரும்பை கடித்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறோம். பொங்கல் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பொங்கலுக்கு அடுத்தபடியாக கரும்புதான்.
இன்றைய சூழலில் பொங்கல் பண்டிகையின் மையப் பொருளான கரும்பை கடித்துச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கரும்பில் அதிகப்படியான கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், சிங்க், தையமின், புரதம், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை உள்ளன.
கரும்புகளை நன்கு கடித்து சாப்பிடுவதன் மூலம் பற்கள் மற்றும் ஈறுகளை பலமடைய செய்ய முடியும்.
கரும்பை நன்கு கடித்து சாப்பிடுவதன் மூலம் பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற முடியும். மேலும் மென்று சாப்பிடும் போது வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
கரும்பை கடித்தவுடன் வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பதால் இவை சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
உடலின் சோர்வை நீக்கி உடலுக்கு ஒரு வித புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.
கரும்பில் உள்ள பொட்டாசியம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பை குறைப்பதோடு அதனை கட்டுப்படுத்த உதவுகிறது.
கரும்பில் அதிகமான ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் பிளவனோய்டுகள் இருப்பதால் இவை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதோடு அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
Explore