சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் கோலா உருண்டை.!!

தேவையான பொருட்கள்: மட்டன் கொத்துக்கறி - அரை கிலோ, முட்டை - 1 , வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2 ,இஞ்சி - 2, பூண்டு - 2 ,துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், கச கசா - 1 டீஸ்பூன், முந்திரி பருப்பு - 10, வறுத்த பொட்டுக்கடலை - 1 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு, கிராம்பு - 2 ,எண்ணெய் - தேவையான அளவு' உப்பு - தேவையான அளவு ஆகியவை.
செய்முறை : மட்டன் கொத்துகறியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கசகசா மற்றும் முந்திரி பருப்பை போட்டு வறுக்கவும்.
அது சற்று பொன்னிறமாக மாறியதும் அதில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக வறுக்கவும். பின், இந்த கலவையில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
பின், இந்த கலவையில் தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கியதும், இதில் மட்டனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் இந்த கலவை நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்த மட்டன் விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முட்டையை சேர்த்து விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின், அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி செய்து வைத்த மட்டன் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதனை அப்படியே சூடாக பரிமாறவும். அவ்ளோ தான் சூடான சூப்பரான மட்டன் கோலா உருண்டை ரெடி.
Explore