பூசணி விதையில் வைட்டமின் ஈ, கரோட்டினாய்டுகள், அதிகமாக உள்ளதால் உடம்பில் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் தேவையில்லாத பொருட்களை வெளியேற்றி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
credit: freepik
100 கிராம் பூசணி விதையில் சுமார் 440-500 கலோரி ஆற்றல் உள்ளது. இதில் உடலுக்கு தேவையான துத்தநாகம் உள்ளதால் நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், புண்கள் விரைவில் ஆறும்.
credit: freepik
இதில் மெக்னீசியம் இருப்பதால், தசைகள், நரம்புகள் நல்ல முறையில் இயங்கும். எலும்புக்கு நல்ல வலிமையைத் தரும். தசை பிடிப்பு, சுளுக்கு நீங்கும். ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை அளவை குறைக்கும்.
credit: freepik
உடலுக்கு தேவையான வைட்டமின் கே, மாங்கனீசு, நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. புற்று நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் பூசணி விதையை உண்பது மிகச் சிறந்தது.
credit: freepik
பூசணி விதையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.
credit: freepik
இதில் அதிகளவில் அடங்கியுள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் இவை உதவுகின்றன.
credit: freepik
எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு சிறந்த சத்தான மெக்னீசியம் இதில் உள்ளது. . தினமும் ஒரு டீஸ்பூன் பூசணி விதைகள் சாப்பிடுவது உங்கள் எலும்பை உறுதியாக வைத்துகொள்ள உதவும்.