காலையில் செய்தித்தாள் வாசிப்பு அவசியமா? ஏன் அவசியம்?

freepik
டிஜிட்டல் உலகில் மொபைல் திரைகளுக்குப் பதிலாக செய்தித்தாள் படிப்பது, குழந்தைகளின் மற்றும் பெரியவர்களின் கவனத்தையும் சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும்.
நாட்டில் நடக்கும் நிகழ்வுகள், மாவட்டத்தின் பிரச்சனைகள் பற்றி அறியலாம்.
காலைப் பொழுதை செய்தித்தாள் படிப்பதன் மூலம் தொடங்குவது மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும், தியானம் செய்வது போன்ற உணர்வைத் தரும்.
புதிய சொற்களைக் கற்றுக்கொண்டு, மொழித்திறனை வளர்க்க உதவும்.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான தகவல்களைப் பெறலாம் (வானிலை, வேலை வாய்ப்புகள் போன்றவை).
காலையில் அதிகபட்சம் 45-60 நிமிடங்கள் ஒதுக்கலாம், அதற்கு மேல் வேண்டாம்.
தலையங்கங்கள், விளையாட்டு, தேசிய மற்றும் உலகச் செய்திகள், உங்கள் மாவட்டச் செய்திகள் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.
காலையில் செய்தித்தாள் படிப்பது ஒரு சிறந்த பழக்கம், இதைத் தொடர்வது மிகவும் பயனுள்ளது.
Explore