மழைக்காலம்: இடி, மின்னலில் இருந்து தப்பிப்பது எப்படி?
போதிய விழிப்புணர்வோடு இருப்பதே மழைக்காலங்களில் இடி, மின்னல் தாக்குதலில் இருந்து காக்கும்.
இடியின்போது 2 காதுகளையும் அழுத்தமாக கைகளைக் கொண்டு மூடுவதால், அதீத ஒலியால் ஏற்படும் அதிர்வை உடல் உணராமல் குறைக்கலாம்.
திடீரென ரோமங்கள் சிலிர்ப்பது, உடற்கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான அறிகுறியாகும். அதனை உணர்ந்த உடன், உடலை வளைத்து, தரையில் அமர்ந்து கொள்வது சிறந்தது.
மின்னலின் போது நீங்கள் மரங்கள் அடர்ந்த வனம் போன்ற பகுதியில் இருந்தால் உயரம் குறைந்து, அடர்த்தியாக பரவி வளர்ந்திருக்கும் செடிகளை கூடாரமாக பயன்படுத்தலாம்.
இடி, மின்னலின் போது நிச்சயம் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் இருக்கக் கூடாது. மேலும் கொடிக்கம்பம், ஆன்டனா போன்றவற்றிக்கு அருகே நிற்க கூடாது.
இந்த சூழ்நிலையில் இருசக்கர வாகன பயணம், மொட்டை மாடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற கூடாரங்களில் தங்கக்கூடாது.
மின்னல் ஏற்படும் போது செல்போன், தொலைபேசியை உபயோகப்படுத்தாமல் இருத்தல் நல்லது.
உயர் அழுத்த மின் தடங்கள், இரும்பு பாலங்கள், செல்போன் கோபுரங்ளுக்கு அடியில் நிற்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.