உடலில் நீண்ட கால வைட்டமின்-டி குறைபாட்டால் ஏற்படும் முக்கிய பாதிப்புகள்!

credit: freepik
உடலில் வைட்டமின்-டி குறைபாடு ஏற்பட்டால் இடுப்பு வலி, மூட்டு வலி, தசை பலவீனம் அல்லது தசைப்பிடிப்பு, எலும்பு வளர்ச்சி அல்லது பற்கள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படும்.
credit: freepik
நீண்ட கால வைட்டமின்-டி குறைபாட்டால் எளிதில் எலும்பு முறிவு, மூட்டு விலகல் ஏற்படும். மிக நாள்பட்ட நிலையில் மூட்டு தேய்மானம் ஏற்பட்டு நடக்க இயலாத நிலையை உருவாக்கும். பொதுவாக, எலும்புகளில் வலி காணப்படும்
credit: freepik
வைட்டமின்-டி எலும்புகளை வலிமையாக பராமரிக்க உதவுவதோடு இதய நோய், நீரிழிவு, மூட்டு தேய்மானம் வராமல் தடுப்பதுடன் உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவுகிறது.
credit: freepik
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின்-டி முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் போதுமான வைட்டமின்-டி இருந்தால் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.
credit: freepik
ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
credit: freepik
பரிந்துரைக்கப்பட்ட அளவு வைட்டமின்-டி உடலில் இருக்கும் போது டைப்-2 வகை நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு. இன்சுலின் உணர்திறன் வைட்டமின்-டி மூலம் கட்டுக்குள் வருகிறது.
credit: freepik
வைட்டமின் டி நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதும், போதுமான சூரிய ஒளி உடலில் படுவதும் வைட்டமின் டி குறைபாட்டை போக்கும்.
credit: freepik
​மேலும் சோயா, பாதாம், ​கானாங்கெளுத்தி மீன், மத்தி மீன், சால்மன் மீன், முட்டை, ​காளான், பால், தயிர், ஆரஞ்சு ஜூஸ் போன்ற உணவுகளில் வைட்டமின் டி நிறைந்துள்ளது.
credit: freepik
Explore