மழைக்காலம்..சளி, இருமல் அவதியா? இதை பண்ணுங்க.!!

மழைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பலரும் சளி, இருமல் என்று அவதிப்பட்டு வருகிறார்கள். இவற்றுக்குத் தீர்வு, அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது.
சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெற சில வீட்டு வைத்தியங்களை எடுத்துக் கொள்ளலாம்.
வெந்நீர் குடிப்பது தொண்டை வீக்கத்தைக் குறைத்து, சளியை நீக்க உதவும்.
சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெற இஞ்சி மற்றும் துளசி நீரை குடிக்கலாம்.
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தொண்டை வலியை குணமாக்கும் மற்றும் மார்பு நோய்த்தொற்றுகளை குறைக்கும்.
மஞ்சள் பாலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் உள்ளன. இது சளியை குறைப்பது மட்டுமல்லாமல், மார்பு இறுக்கத்தையும் குறைக்கிறது.
சூடான பானங்களை அருந்துவது உடல் வெப்பநிலையை சமப்படுத்த உதவுகிறது. தேயிலை காபி, டீ போன்ற பானங்களை அருந்தலாம்.
காய்கறி சூப் வளர்சிதை மாற்றத்தை உயர்வாக வைத்திருக்கிறது மற்றும் பருவகால வைரஸ்களிலிருந்து வெள்ளை ரத்த அணுக்களை பாதுகாக்க உதவுகிறது.
Explore